அட இத யாரும் எதிர்பார்க்கலியே... 'ஜெயிலர்', 'மாவீரன்' மோதப்போகிறதா!? எதிர்பாராத ட்விஸ்ட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதியில் திடீரென மாற்றம் ஏறபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 'மாவீரன்' படத்துடன் மோதுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம் 'ஜெயிலர்'. நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் செப்டெம்பர் மாதம், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், 'ஜெயிலர்' படம் வரும் ஆகஸ்ட் மாதமே வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படம் உருவாகியுள்ள நிலையில், இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
இது ஒருபுறமிருக்க, தற்போது 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 'ஜெயிலர்' படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியிட இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால், சூப்பர் ஸ்டாரின் படத்திற்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்பதால், 'மாவீரன்' பட வசூலில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் 'மாவீரன்' படத்தின் வெளியீடு தள்ளிப்போகுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.