அட... இது புதுசா இருக்கே... விஜய் எடுத்த அதிரடி முடிவு!

அட... இது புதுசா இருக்கே... விஜய் எடுத்த அதிரடி முடிவு!

தளபதி விஜய்னாலே மாஸ்தான். தமிழ்த்திரையுலகில் அவருக்கான ரசிகப்பட்டாளம் என்றால், குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அந்த லிஸ்ட்டில் அடங்குவர். அந்தளவுக்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் தற்போது 'லியோ' படம் உருவாகிவருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவர, பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்துள்ளன.

விஜய் சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் தடம் பதிப்பார் எனவும் கூறப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்.

அந்தவகையில், அவர் தற்போது இன்னொரு விஷயத்தையும் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற 3 பேர் வீதம், தமிழகம் முழுவதும் தேர்வு செய்து அவர்களைப் பாராட்டி, தன் கையால் கல்வி உதவித்தொகைகளை வழங்க உள்ளார்.

அதன்படி, 234 தொகுதிகளிலும் உள்ள மாணவ, மாணவிகளுக்கும் இந்த உதவிகள் போய் சேரும் விதமாக, இந்த திட்டத்தை மிகப்பெரிய அளவில் நடிகர் விஜய் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக மாவட்டம் வாரியாக விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் அறியப்படுகின்றன.

ஏற்கனவே, விலையில்லா விருந்து திட்டம் என்ற திட்டத்தை தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் செயல்படுத்திவருவதோடு, தலைவர் சிலைக்கு மரியாதை, தற்போது மாணவ, மாணவிகளுக்கு அவர் செய்யவிருக்கும் கல்வி உதவித் தொகை திட்டம் என எல்லாம் சேர்ந்து விஜய் அரசியல் வருகையை உறுதிப்படுத்துவதாகவும் பேச்சுக்கள் எழுந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com