ரஜினிகாந் ரசிகர்கள்
ரஜினிகாந் ரசிகர்கள்

ஜெயிலர் படப்பிடிப்பு: ரஜினியைக் காண திரண்ட மக்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்சமயம் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடலூரில் நடைபெற்று வருகிறது. இங்கு ரஜினிகாந்தைக் காண ரசிகர்கள் படையெடுத்து வரும் காட்சி வைரலாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, கடலூர் அருகே உள்ள அழகிய நத்தம் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.

அப்போது, ரஜினியை பார்ப்பதற்காக அந்த பகுதி மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பொதுமக்கள் தொலைவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதோடு, தகுந்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே பகுதியில்தான் ரஜினி நடித்த ‘படையப்பா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

ரஜினியை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து வந்து உற்சாகமாக முழக்கமிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com