ஃபீனிக்ஸ் பறவை சமந்தா

ஃபீனிக்ஸ் பறவை சமந்தா

பல்வேறு செய்திகள், வதந்திகள் உடல் நிலை பற்றி பேசப்படும் விஷயங்கள் என அனைத்திற்கும் முற்று புள்ளி வைக்கப் போகிறார் சமந்தா. தெலுங்கு சினிமாவின் சாக்லேட் பாய் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் ஜோடி சேர உள்ளார்.

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடியாக நடிக்கும் 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் சிவ நிர்வானா- நடிகர் விஜய் தேவரகொண்டா - ' ஹிருதயம்' படம் புகழ் இசைமைப்பாளர் ஹேஷாம் ஆகியோர் அண்மையில் முக்கியமான சந்திப்பு ஒன்றினை நடத்தி, விரிவாக விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து 'குஷி' படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள படத்தின் நாயகியான நடிகை சமந்தாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். 

இதனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'குஷி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதனை 'குஷி' படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. விஜய் -ஜோதிகா நடித்த குஷி படத்திற்கு தமிழ் நாட்டில் பெரிய வரவேற்பு இருந்தது. இதே போல் நம்ம சென்னை பொண்ணு  சமந்தா -விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம். Come back Samantha!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com