விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' திரைப்படம்!

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

2016-ல் இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் 'பிச்சைக்காரன் 2'. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி சசி இயக்கிய பிச்சைக்காரன் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழகத்தை தாண்டி ஆந்திர - தெலுங்கானா பகுதிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக 50 லட்சத்திற்கு விற்கப்பட்ட பிச்சைக்காரன் படம் 20 கோடி ரூபாய் வசூல் செய்தது.

பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஜய் ஆண்டனி முடிவெடுத்தார். அத்துடன் அந்தப் படத்தை அவரே இயக்கி, நடித்து, இசையமைக்கிறார். படத்தொகுப்பையும் அவரே மேற்கொள்கிறார். காவ்யா தாபர்,யோகி பாபு,அஜய் கோஷ்,ஜான் விஜய்,ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

பிச்சைக்காரன் 2
பிச்சைக்காரன் 2

இந்த படத்தின் சாட்டீலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ்யை ஸ்டார் நெட்ஒர்க்ஸ் வாங்கியுள்ளது. சாட்டீலைட் ரைட்ஸ் விஜய் டிவியும் , நெட்ஒர்க்ஸ் ரைட்ஸ் டிஸ்னி ஹாட்ஸ்டார்யும் வாங்கியுள்ளது. 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கோடைகாலத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com