"பிச்சைகாரன் 2 கதை என்னுடையது '' விஜய் ஆண்டனி மீது பரபரப்பு புகார்!               

"பிச்சைகாரன் 2 கதை என்னுடையது '' விஜய் ஆண்டனி மீது பரபரப்பு புகார்!               

மிழ் சினிமாவும் கதை திருட்டும் பிரிக்க முடியாத அம்சங்களாக மாறி வருகிறது. இப்போது இந்த லிஸ்டில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைகாரன் 2 நடித்த படமும் சேர்ந்துள்ளது.

இயக்குநர் ஆண்டனி தாமஸ் என்பவர் இரண்டாண்டுகளுக்கு முன்பு விஜய் ஆன்டனியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். பல பக்கங்கள் கொண்ட ஸ்கிரிப்ட்டை தந்து படிக்க சொல்லியிருகிறார் ஆன்டனி தாமஸ். கதை பிடித்து போன விஜய் ஆன்டனி நடிக்க ஒகே சொல்லி அட்வான்ஸ் கேட்டுள்ளார். ஆன்டனி தாமஸ் அழைத்து சென்ற தயாரிப்பாளர் ஒரு வாரத்தில் பணம் ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறார். பின்பு இயக்குநரால் விஜய் ஆன்டனியை தொடர்பு கொள்ளமுடியாமல் போய் விட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு பிச்சைகாரன் 2 படம் வெளியான போது படத்தை பார்த்த ஆன்டனி தாமஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் சொன்ன கதையை தன்னிடம் அனுமதி பெறாமல் படம் எடுத்ததாக குற்றம் சாட்டுகிறார். காட்சிக்கு காட்சி தான் சொன்ன விஷயங்கள் அப்படியே இருப்பதாக சொல்கிறார். தான் இந்த கதையை 2016 ல் பதிவு செய்துவிட்டதாக சொல்கிறார் ஆன்டனி தாமஸ்.   

படம் வெளியான இந்த இரண்டு மாதங்களில் பலமுறை விஜய் ஆன்டனியை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போன ஆன்டனி தாமஸ் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் தனக்கு நியாயம் கிடைக்க புகார் தந்துள்ளார். இந்த சங்கத்தின் தலைவராக இருப்பவர் கே. பாக்யராஜ். திருட்டிலேயே மிக மோசமான திருட்டு அறிவு திருட்டுதான். இந்த திருட்டை சர்வ சாதாரணமாக தமிழ் சினிமாகாரர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனை வரும் போதெல்லாம் பஞ்சாயத்து செய்வது, பண பேரம் பேசுவது போன்ற தற்காலிக தீர்வுகளை சங்கங்கள் மேற் கொள்ளாமல் நிரந்தர தீர்வை முன்னெடுக்க வேண்டும்.இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக இருக்கும் போது இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது எழுத்தாளர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com