நீங்க என்னதான் சோழர்கள், பாண்டியர்களுன்னு பேசுனாலும் நாங்க இப்படித்தான் படம் எடுப்போம் என்று பிடிவாதமா இருக்கும் நம்ம கோடம்பாக்கத்து சிங்கங்கள் தந்திருக்கும் படம்தான் பிஸ்தா.
மெட்ரோ சிரிஷ் ஹீரோவாக நடிக்க ரமேஷ் பாரதி டைரக்ட் செய்து இருக்கிறார். வேலை வெட்டி எதுக்கும் போகாமல், ஊரில் நடக்கும் கல்யாணத்தை நிறுத்தும் வேலையை செய்யும் நம்ம ஹீரோ.
இதை நம்ம ஹீரோக்கள் பல வருஷத்துக்கு முன்னால் பல படங்களில் செய்து முடிச்சுட்டாங்க. இவரால் பாதிக்கபட்டவர்கள் சும்மா இருப்பாங்களா? ஹீரோவோட கல்யாணத்த நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

இதை எப்படி நம்ம ஹீரோ சமாளிக்கிறார் என்பது தான் கதை. காமெடி படம் எடுக்குறோம் என்ற பெயரில் யோகிபாபு, சதீஷ், ஞானசம்பந்தம், செந்தில் என பலரை படத்தில் போட்டுருக்காங்க. ஆனா சிரிப்புதான் வரலை. படத்துல ஒரு சில சீன்ல காதுல ரத்தம் வருகிற மாதிரி காட்டுறாங்க.
இவங்க காமெடின்ற பெயரில் அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் நமக்குதான் காதில் ரத்தம் வந்து விடும் போல் இருக்கிருக்கிறது ஹீரோவின் உடல் மொழியும் குரலும் குழந்தை தனமாக இருக்கு. ஹீரோயின் மிருதுளா முரளி ஹீரோவுக்கு அக்கா மாதிரி இருக்காங்க.
படத்தில் ஹீரோயினை விட ஹீரோயின் அக்காவா வர்றவங்க, ஹீரோவுக்கு சொந்தக்கார பெண்களாக நடிக்கிறவங்க என பலரும் அழகா இருக்காங்க. பெரிய பிரம்மாண்ட படங்களுக்கு மத்தியில் ஜாலியா லாஜிக் பத்தி யோசிக்காம படம் பார்க்கணும்னா பிஸ்தா போய் பாருங்க.