பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய ஸ்நீக் பீக் வீடியோ!

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய ஸ்நீக் பீக்  வீடியோ!

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய ஸ்நீக் பீக் வீடியோவை லைகா நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன்-2 இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக தனது படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது .

பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது.

லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா மூவியாக இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் முதல் படம் ps 2 4DX இல் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாகக் கதையின் அறிமுக உரையை, கமல்ஹாசன் வாய்ஸ் ஓவரில் கூறியிருந்தது போலவே, இரண்டாவது பாகத்திலும் கமல்ஹாசன் கதை சுருக்கத்தை விளக்கி இருக்கும் அறிமுக விடியோவானது சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.

கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் படத்தின் முதல் பாகத்துக்கு பின் 2-ம் பாகம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கக் கூடிய நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக படக்குழு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூர் என பல இடங்களுக்கு சென்று, படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக, இப்படத்தின் புதிய ஸ்நீக் பீக் வீடியோவை லைகா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com