'பொன்னியின் செல்வன் 2' First Review! இத நீங்க பாத்தீங்களா?

'பொன்னியின் செல்வன் 2' First Review! இத நீங்க பாத்தீங்களா?

'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் உலகளவில் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்படம் குறித்த தனது பதிவு ஒன்றை வெளிநாட்டு சென்சார் குழு உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து வெளியிட்டுள்ளார்.

கடந்தாண்டு லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. வரலாற்றுப் பின்னணியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரவு, அஸ்வின், சரத்குமார், பார்த்திபன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த நாவலை படமா எடுக்க பலரும் முற்பட்டு தோல்வியையே சந்தித்த நிலையில், மணிரத்னம் துணிந்து இறங்கி முதல் பாகத்தை எடுத்து அதில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி அதன் 2ம் பாகம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், வெளிநாட்டு சென்சார் குழு உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, #PonniyinSelvan2 will be Sure Shot Disaster! Inside Reports are Crap #PS2!' என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இப்படம் வெளிநாட்டு சென்சார் குழுவிடம் செல்லவில்லை என்றும், அதற்குள் இவர் எப்படி விமர்சனம் கொடுப்பார் எனவும் ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழும்பியுள்ளது.

இவரது நெகட்டிவ் பதிவைக் கண்ட, ரசிகர்கள் பலரும் கடுப்பாகி, ரீ-ட்வீட் செய்து தங்கள் கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர்.

அதிலும் ஒருவர் லைகா நிறுவனத்தை டேக் செய்து இவர் மீது நடவடிக்கை எடுங்கள் எனவும் பதிவுட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com