க்யூட் வீடியோ வெளியிட்ட, கின்னஸ் பக்ரு!

க்யூட் வீடியோ வெளியிட்ட, கின்னஸ் பக்ரு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மலையாளம், தமிழ் என பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கின்னஸ் பக்ரு.

1986ல் வெளியான 'அம்பிலி அம்மாவன்' படத்தின் மூலம் தனது 10 வயது முதல் நடிக்கத் தொடங்கினார். பின்னர் பல படங்களில் நடித்துவந்த இவர் மலையாளத்தில் 2005ல் வெளியன 'அத்புத த்வீபு' படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த நிலையில், ஸ்பெஷல் ஜூரி விருதையும் வாங்கினார்.

இதையடுத்து, பல படங்களில் முன்னணி காமெடி நடிகராகவும் வலம் வரும் இவர், தமிழில், 'டிஷ்யும்', 'அற்புத தீவு', '7ம் அறிவு', 'பகீரா' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், 2006ம் ஆண்டு இவருக்கு திருமணமான நிலையில், 14 வயதில் தீப்தா என்ற மகள் இருக்கும் நிலையில், தற்போது இவருக்கு 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கின்னஸ் பக்ரு, தனது 2ம் மகளை கையில் வைத்து இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ...

logo
Kalki Online
kalkionline.com