ஹீரோவாக களமிறங்கும் ராகவா லாரன்ஸின் தம்பி!

ராகவா லாரன்ஸ் - எல்வின்
ராகவா லாரன்ஸ் - எல்வின்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸின் தம்பி புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ். முக்கியமாக டான்ஸ் மாஸ்டர். இப்படி பன்முக கலைஞராக திகழும் ராகவா லாரன்ஸுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். எப்போது கருத்துள்ள படங்களில் நடிக்கும் இவர், தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், இவரது தம்பி எல்வின் நடிக்கவுள்ள புதிய படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாகவும் இப்படம் காமெடி உருவாகும் என்று கூறப்பட்டு, கந்த 2022 ஆம் ஆண்டு இப்படத்திற்கு பூஜையுடன் தொடங்கியது.

இப்படம் பற்றி வேறு எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், அருள் நிதி நடித்த டைரி என்ற படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் எனப்வரின் இயக்கத்தில் புதிதக உருவாகவுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸும் அவரது தம்பியும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்பட ஷுட்டிங் சென்னையில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ராகவா லாரன்ஸின் தம்பி, லாரன்ஸின் பாடல் ஒன்றில் திடீரென என்ட்ரி கொடுத்து நடனத்தில் பட்டைய கிளப்பியிருப்பார். இதையடுத்து இவர் கதாநாயகனாக அறிமுகமாவதாக அறிவிக்கப்பட்டதால் இந்த கூட்டணி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com