'RRR' 2ம் பாகம் விரைவில் தொடங்கப்படும்! தீவிரமாக இருக்கும் ராஜமௌலி!
சமீபத்தில் ராஜமௌலி இயக்கிய 'RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் பெற்றதையடுத்து, இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் 'RRR 2'ம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 25 அன்று, பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் தயாரான இப்படம் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு, உலகெங்கும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, சமீபத்தில் இப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வானதையொட்டி, இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ஆஸ்கருக்குப் பின், இயக்குனர் ராஜமௌலி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, "RRR படத்தின் பாடல் ஆஸ்கார் விருது பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருது எங்கள் படக்குழுவிற்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுப்போம். அதற்கான பணிகளையும் சீக்கிரமாக தொடங்குவோம்'' என்றார்.

'ஆர்ஆர்ஆர்' படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்ததைத் தொடர்ந்து, தற்போது அதன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.