உயர்ந்த விருதை தட்டித் தூக்கிய ராஜமௌலியின் RRR! எதுக்குன்னு தெரிஞ்சா பூரிச்சுப் போவீங்க...

உயர்ந்த விருதை தட்டித் தூக்கிய ராஜமௌலியின் RRR! எதுக்குன்னு தெரிஞ்சா பூரிச்சுப் போவீங்க...

சென்ற ஆண்டு மார்ச் மாதம் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் RRR. இப்படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கியிருந்தார். இந்நிலையில், RRRல் இடம்பெற்ற பாடல் Golden Globe For Best Original Song -க்கான விருதை பெற்றுள்ளது.

ராஜமௌலி என்றாலே அந்தப் படம் பிரம்மாண்டம், ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகள் என எங்குமே குறை இல்லாத அளவுக்கு படைப்பை செதுக்கி செதுக்கி உருவாக்கி இருப்பார்.

அந்த வகையில் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம்தான் RRR. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் கதாநாயகர்களாக நடித்திருந்தனர்.

இருவருமே படம் முழுக்க குறை ஏதும் இல்லாமல் சிறப்பாக நடித்திருந்தனர். அதிலும் இருவரும் ஒரே மாதிரியான ஸ்டெப்ஸ்களை போட்டு ஆட்டம் போடும் 'நாட்டு நாட்டு' பாடல் உலக அளவில் செம ஹிட்டானது.

இந்நிலையில், தற்போது 'நாட்டு நாட்டு' பாடலுக்கு Golden Globe For Best Original Song விருது கிடைத்துள்ளது. 80வது கோல்டன் குளோப்ஸில் சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழித் திரைப்படப் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com