முத்துவேல் பாண்டியனாக கலக்கலாக ரஜினி......!

ஜெயிலர் ரஜினி
ஜெயிலர் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தில் இருந்து முக்கியமான அப்டேட்டை தற்போது படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72வது பிறந்த நாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லம் முன்பு கேக் வெட்டி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ரஜினியின் உருவம் பதித்த கேக்கை வெட்டி, உற்சாகமாக கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில், ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்திற்குஇசையமைத்து வருகிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஜெயிலர், 2023 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்றுமாலை அவரது கேரக்டர் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட உள்ளது.

அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு முத்துவேல் பாண்டியன் வருகிறார் என்ற கேப்ஷனுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ரஜினியின் வேற லெவல் போஸ்டருடன் வெளியாகியுள்ள இந்த அப்டேட், ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ஜெயிலராக நடிப்பது உறுதியாகி இருந்தாலும், அவரது கேரக்டரின் பெயர் என்ன என்பது இதுவரை சஸ்பென்ஸாகவே இருந்தது. இந்நிலையில், ரஜினியின் கேரக்டர் முத்துவேல் பாண்டியன் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com