ரஜினி-கபில்தேவ் இணைந்து நடிக்கும் படம் : வைரல் புகைப்படத்தின் பின்னணி இதுதான்!

ரஜினி-கபில்தேவ் இணைந்து நடிக்கும் படம் : வைரல் புகைப்படத்தின் பின்னணி இதுதான்!

Published on

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அன்றும் இன்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். அதேபோல், 1983ல் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மாபெரும் வெற்றிபெற்று, கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர், அன்றைய இந்திய அணி கேப்டன் கபில்தேவ் என்பதையும் யாராலும் மறுக்க இயலாது.

இந்நிலையில், கபில்தேவ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் சந்தித்துக்கொண்ட நிலையில், அறையில் இருக்கும்போது, இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது அதன்பின்னணி குறித்த சுவாரசிய தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இப்படத்தில் நடிக்க, மொய்தீன் பாய் என்கிற கெஸ்ட் ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 'லால் சலாம்' படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகிவரும் நிலையில், இந்தியாவுக்கு முதன்முதலாக உலகக்கோப்பையை பெற்றுத்தந்த முனனாள் கேப்டன் கபில்தேவ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுகுறித்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடத்தப்பட்ட நிலையில்தான், அங்கு இரண்டு ஸ்டார்களும் சந்தித்துக்கொண்ட போது, எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் இது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், நடிகர் ரஜினிகாந்தும் அவரது ட்விட்டர் பக்கத்தில் கபில்தேவ், ரஜினி இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, கிரிக்கெட் லெஜண்ட் கபில்தேவ்ஜி உடன் பணியாற்றியதை கவுரவமாகக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது இது சம்பந்தமான புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் கெட்டப்பும் அனைவரையும் கவர்ந்துவருகிறது. கண்ணாடி, தாடி, முழு கை வெள்ளை சட்டை என வித்தியாசமான கெட்டப்பில் கலக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com