ரஜினி-சரத்குமார்
ரஜினி-சரத்குமார்

காபி வித் பழுவேட்டையர்! ரஜினி-சரத்குமார் சந்திப்பு !

ஒரு படம் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றிருந்து , அப்படத்தில் நடித்த கலைஞர்கள் மிக சிறப்பாக நடித்திருந்தால் அவர்களை அழைத்து பாராட்டுவது ரஜினியின் நெடுநாள் வழக்கம்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ரஜினி. குறிப்பாக பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார். இதை பலமுறை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.

ரஜினி
ரஜினி

சமீபத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்ற பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் சரத்குமார். படத்தை பார்த்தவுடன் ரஜினி சரத்தை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.

சரத்குமார்
சரத்குமார்

இதோடு நின்று விடாமல் சரத்குமாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார் ரஜினி. "காபியை அருந்திக்கொண்டே சுமார் ஒரு மணி நேரம் நானும், ரஜினியும் பேசினோம். என் கேரக்டர், எனக்கு கிடைத்த அனுபவம், அவரின் பார்வை என பல்வேறு விஷயங்களை கலந்துரையாடினோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி,சரத்குமார்
சூப்பர் ஸ்டார் ரஜினி,சரத்குமார்

"என் திரைப்பட வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இந்த சந்திப்பு" என்கிறார் சரத்குமார். சூப்பர் ஸ்டாரும், சுப்ரீம் ஸ்டாரும் ஒரு காபியில் இணைந்து நண்பர்களை போல பேசியதை நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இருவரும் திரையில் இணையும் நாளை தமிழ் நாடே எதிர்பார்க்கிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com