ரஜினி - சிவகார்த்திகேயன் - சிவ ராஜ்குமார்
ரஜினி - சிவகார்த்திகேயன் - சிவ ராஜ்குமார்

ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி - சிவகார்த்திகேயன் - சிவ ராஜ்குமார் சந்திப்பு!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. முதற்கட்டமாக ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோர் ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் ஜெயிலர் படப்பிடிப்பில் சிவ ராஜ்குமார் கலந்துகொண்டதாக படக்குழு அறிவித்தது. அதேபோல், கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்துகொண்டதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, ஜெயிலர் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டாருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஜெயிலர்
ஜெயிலர்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவ ராஜ்குமார் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜெயிலர் படப்பிடிப்புத் தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவ ராஜ்குமார் எடுத்துக்கொண்ட போட்டோவும் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக சிவ ராஜ்குமாரின் தம்பியும் கன்னட திரையுலகின் பவர் ஸ்டாருமான மறைந்த புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு வழங்கிய விருது விழாவில் ரஜினி பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இரண்டு சூப்பர் ஸ்டார்களும் சந்தித்துக் கொண்ட போட்டோ வைரலாகி வரும் நிலையில், இன்னொரு சந்திப்பும் கவனம் பெற்றுள்ளது. ஜெயிலர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரை சிவகார்த்திகேயன் நேரில் சென்று சந்தித்துள்ளார். சிவ ராஜ்குமார் - சிவகார்த்திகேயன் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களும் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன. நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனும் நடிப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால், அதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் - சிவ ராஜ்குமார் சந்திப்பு நடைபெற்றது ரசிகர்களை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. சிவ ராஜ்குமாரை சந்திப்பதற்காக மட்டும் சிவகார்த்திகேயன் அங்கு சென்றாரா? அல்லது ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்கிறாரா என கேள்விகள் எழுகின்றன. சிவகார்த்திகேயனும் நெல்சனும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், கேமியோ ரோலில் கூட சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளதாக தற்போதைய தகவல் தெரிவிக்கின்றன. இதனிடையே நேற்று வெளியான ஜெயிலர் கிளிம்ப்ஸ், ரஜினி ரசிகர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com