ரஜினிகாந்த் மகள்கள் வீட்டில் தொடரும் திருட்டு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ரேஞ்ச் ரோவர் காரின் சாவி காணாமல் போனதால் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காணாமல் போன கார் சாவிக்கு டூப்ளிகேட் சாவி பெற வேண்டும் என்றால் எஃப் ஐ ஆர் பதிவு செய்திருக்க வேண்டும் என விதி இருப்பதால் புகார் அளிக்கப்பட்டதாகத் தகவல்.
சௌந்தர்யா தனது வீட்டில் இருந்து தனியார் கல்லூரிக்கு செல்லும் போது வீட்டில் வைத்து கைப்பையுடன் கார் சாவி காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில், மார்ச் மாதத்தில், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 3 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதாகக் கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் , 18 ஆண்டுகளாக தன்னிடம் பணிபுரியும் பணிப்பெண் மற்றும் ஓட்டுநரை சந்தேகிப்பதாகவும் கூறினார். அவரது புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடியது வீட்டு வேலை செய்பவர் மற்றும் ஓட்டுநர் எனக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்தனர்.
ஐஸ்வர்யாவிடம் இருந்து திருடிய நகைகளை சிறிது சிறிதாக விற்றுவிட்டு நகரின் வேறொரு பகுதியில் அடுக்குமாடி வீடு வாங்கியதாக வீட்டு உதவியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொழில் ரீதியாக, சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் திரைப்படமான கோச்சடையான் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் அவர் தனுஷ் மற்றும் அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தையும் இயக்கினார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது இயக்கத்தில் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட அரசியல் திரைப்படமான லால் சலாம் படப்பிடிப்பில் பிஸியாக இயங்கிக் கொண்டு இருக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், மேலும் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். லால் சலாம் படத்தில் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது, தன் தந்தையை மொய்தீன் பாய் என கெட் அப் மாற்றி வித்தியாசமாக ஐஸ்வர்யா அறிமுகப்படுத்தினார்.