ராட்சசன் கிறிஸ்டோபர் சரவணனின் 'குற்றப்பின்னணி'!
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் வழங்கும் 'குற்றப்பின்னணி' திரைப்படத்தை இயக்குநர் என்.பி. இஸ்மாயில் இயக்கியுள்ளளார். ஆயிஷா அக்மல் இப்படத்தை தயாரித்துள்ளார். 'ராட்சசன்' படத்தில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடித்த சரவணன் நடிகராக நடித்துள்ளார். தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு,நேரு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜித் இசையமைத்துள்ளார். சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய நாகராஜ்.டி எடிட்டிங் செய்துள்ளார். சண்டைப்பயிற்சிகளை ஆக்ஷன் நூர் மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு ரா.ராமமூர்த்தி வசனம் எழுதியுள்ளார்.
பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை களம். பெண்களின் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே 'குற்றப்பின்னணி'. இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.