புது கெட்டப்பில் ஷாலினியுடன் நடுக்கடலில் ரொமான்ஸ்! வைரல் போட்டோஸ்!
தளபதி விஜய்யின் 'லியோ' படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும்வேளையில், தல அஜித் படம் குறித்து அப்டேட்கள் வராதா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே அதிகரித்து வந்தாலும், அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்கள் என அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களை ஆசுவாசப்படுத்தி வருகிறது என்றுதான் கூற வேண்டும்.
பொதுவாகவே, அஜித் சமூக வலைத்தளங்களில் இடம் பெறுவதே இல்லை. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த விஷயங்களை வெளிப்படையாக காட்டிக் கொள்வதிலும் அஜித்திற்கு விருப்பமில்லை.
ஏதேனும் பொதுநிகழ்ச்சிக்கு சென்றால் மட்டுமே அவரது குடும்ப புகைப்படங்களோ, அவரது புகைப்படங்களோ வெளியாகி வைரலாகும். அதையும் மீறி சில நேரங்களில் ரசிகர்கள் அவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு டிரெண்டாக்கி விடுவர்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் குடும்பத்துடன், லண்டன், போர்ச்சுகல், ஸ்காட்லாந்து என ஜாலியாக தனது பொழுதை கழித்து வந்த நிலையில் அங்கு ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
அதைத் தொடர்ந்து தற்போது, அஜித் ஷாலினி இருவரும் துபாயில் இருந்துவரும் நிலையில், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.

நடுக்கடலில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது, அஜித் ஷாலினி இருவரும் ரொமான்ஸ் மூடில் இருக்கும் அழகான ஜோடியாக காட்சியளிக்கின்றனர்.

1999ல் அஜித் நடித்த 'அமர்க்களம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார். அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அடுத்த வருடமே இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அப்போது எப்படி இருவரும் இருந்தார்களோ, அதே போன்ற ஒரு தோற்றம்தான் இப்போது இந்த புகைப்படங்களைப் பார்க்கும்போதும் தோன்றுகிறது.
அஜித்தின் 'ஏகே62' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்கும் நிலையில், மேற்கொண்டு படம் குறித்த அப்டேட்கள் எதுவும் வராததால், கவலையோடு இருக்கும் ரசிகர்களுக்கு அஜித், ஷாலினி புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு ஓரளவு எனர்ஜி கொடுத்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.