'RRR', 'PS' படங்களை பின்னுக்குத் தள்ளிய 'புஷ்பா 2'!
அல்லு அர்ஜுன் நடிப்பில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான 'புஷ்பா' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இப்படத்தை, இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம், தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. செம்மரங்களை வெட்டும் கூலித் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கும் அல்லு அர்ஜூன் பின்னர், மிகப்பெரிய கடத்தல் தாதாவாக மாறும்படியாக முதல் பாகம் வெளியாகியிருக்கும்.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதன் 2ம் பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி, 'புஷ்பா 2' படத்தின் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி படுவைரலானது.
அந்த போஸ்டரில் அல்லு அர்ஜூன் பெண் வேடத்தில் வித்தியாசமான கெட்டப்பில் கலக்கியிருந்ததோடு, 2ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு எகிறியுள்ளது.
படக்குழுவினரும், இப்படத்தின் மூலம் வியாபார ரீதியாக மிகப்பெரிய லாபத்தை ஈட்டவும் முயற்சி செய்து வருகின்றனர். அந்தவகையில், 'புஷ்பா 2' ஆடியோ ரைட்ஸ் மட்டும் 65 கோடிக்கு T- Series நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் அறியப்படுகிறது. 'RRR', 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடியோ ரைட்ஸ் 25 கோடிதான் என்று கூறப்படும் நிலையில், தற்போது 'புஷ்பா 2' அதையெல்லாம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.