ஆர். ஜே. பாலாஜி
ஆர். ஜே. பாலாஜி

" அசாதாரண மரணம் கவலை தருகிறது...ஆர். ஜே. பாலாஜி " !

ஆர் ஜே. பாலாஜி எப்போதும் மேடையில் நகைச்சுவையாக பேசும் ஆர். ஜே. பாலாஜி முதல் முறையாக கவலையுடன் பேசியுள்ளார். ரன் பேபி ரன் என்ற படத்தின் ட்ரைலர் வெளியிட்டு சமீபத்தில் விழா நடந்தது.

இந்த நிகழ்வில் இப்படத்தின் நாயகன் பேசிய பாலாஜி "சமீப காலங்களில் யூ டியூப் உட்பட பல்வேறு இளைஞர்கள் சினிமாவை பற்றி விவாதங்களை செய்து வருகிறார்கள்.சில சமயங்களில் வரம்பு மீறுகிறார்கள்.சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு இளைஞனின் அசாதாரண மரணம் என்னை மிகவும் பாதித்தது.

நாங்கள் உருவாக்கும் சினிமாவை பற்றி பேச நாங்கள் இருக்கிறோம். இதற்குத் தான் சம்பளம் வாங்குகிறோம். இளைஞர்கள் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடலாம்.பல கருவிகளின் வருகையால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு எதிர்காலம் கேள்விகுள்ளாகிறது. இதை பற்றி நமது இளம் தலைமுறையினர் யோசிக்கலாம். ரன் பேபி ரன் டைரக்டர் விஜின் கிருஷ்ணகுமார் மலையாளத்தில் வெற்றி படங்கள் தந்தவர்.

இது சஸ்பென்ஸ் திரில்லர் கதை. நான் காமெடியாக இல்லாமல் சீரிஸ் கேரக்டர் செய்துள்ளேன்" என்றார் " நான் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று டைரக்டர் உறுதியாக இருந்தார். இந்த படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது." என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சாம் சி. எஸ் படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com