சல்மான்கானின் பாதுகாப்பு உத்தரவு!

சல்மான்கானின் பாதுகாப்பு உத்தரவு!

பாலிவுட் பூமராங்!

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான்கான் பலவகை கிசுகிசுக்களில் சிக்கியவர் என்றாலும், பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாகவும், கண்டிப்பாகவும் இருக்கக்கூடியவர் என்கிற புதுத் தகவலைத் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை பாலக் திவாரி.

ஏப்ரல் 21 அன்று வெளியாக விருக்கும் ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பாலக் திவாரி நடித்துள்ளார். இதற்கு முன்பு சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘ஆண்டிம்’ என்கிற படத்தில் உதவி இயக்குனராகவும் பாலக் திவாரி பணியாற்றியுள்ளார்.
இப்படங்களின் படப்பிடிப்பு சமயம், படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் பெண்கள் மற்றும் கதாநாயகி களுக்கும் சேர்த்து சல்மான்கான் போடும் உத்தரவு என்னவென்றால் “பெண்கள் அணியும் ஆடைகள் அவர்களின் கழுத்துக்கு கீழே இறங்கி இருக்கக்கூடாது. கழுத்துவரை மூடிய ஆடைகளையே அணிய வேண்டும்” என்பதாகும்.

மேலும், கிளாமர் சீனில் நடித்து முடித்த பிறகு இந்த உத்தரவை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டு மென்பதில் உறுதியாக இருப்பவர் சல்மான்கான்.

பாலக் திவாரியும், இந்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டு கழுத்துவரை மூடிய ஆடை அணிந்து படப்பிடிப்புக்குச் செல்கையில், “ஏன் இப்படி உடை அணிகிறாய்?” என்று அவரது அம்மாவே சந்தேகப்பட்டு கேட்க, விளக்க வேண்டிய நிலைமை ஆனதென பாலக் திவாரி கூறியுள்ளார்.

பெண்களின் பாதுகாப்புக்காகவே சல்மான்கான் இப்படி நடந்து கொள்வதாகவும், அவர்களது உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்தில் இல்லையென பாலக் திவாரி சொல்கிறார்.

“சூப்பரான பாதுகாப்பு உத்தரவுதான்!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com