600 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட நடிகை சமந்தா! காரணம் இதுதான்!

600 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட நடிகை சமந்தா! காரணம் இதுதான்!

சில மாதங்களுக்கு முன்பாகவே சமந்தா myositis என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தநிலையில், அதற்கான சிகிச்சையையும் முறையாக எடுத்துகொண்டு வருகிறார்.

இருந்தும் சில பட விழாக்களில் கலந்துகொள்ளும்போதுகூட அவர் உடல் மெலிந்து காணப்பட்ட நிலையில், ரசிகர்கள் உட்பட பலரும் அவருக்கு ஆறுதல் கூறிவந்தனர்.

இதைத்தொடர்ந்து, சமீபத்தில், கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேறியவாறு, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் உடற்பயிற்சி செய்வதுபோல் வீடியோவை வெளியிட்ட நிலையில், அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் கம்பேக் கொடுத்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், சமந்தா தற்போது பழனி மலை முருகன் கோவிலில், தனது உடல் நலன் பரிபூரணமாக குணமடைய வேண்டும் என்பதற்காக, பழனி மலை முருகன் கோவிலில் உள்ள 600 படிகட்டுகளிலும் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்துள்ளார்.

அவர் ஒவ்வொரு படிக்கட்டாக கற்பூரம் ஏற்றும் வீடியோவானது, தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நீங்கள் விரைவில் பூரணமாக குணமடைவீர்கள் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com