வேற லெவல் வீடியோவை வெளியிட்ட சமந்தா!

வேற லெவல் வீடியோவை வெளியிட்ட சமந்தா!

சில மாதங்களுக்கு முன்பாகவே சமந்தா myositis என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தது அனைவரும் அறிந்த விஷயம். மேலும் அதற்கான சிகிச்சையையும் முறையாக எடுத்துகொண்டு இருந்தார்.

இருந்தும் சில பட விழாக்களில் கலந்துகொள்ளும்போதுகூட அவர் உடல் மெலிந்து மிக சோகமாகவும் காணப்பட்ட நிலையில், பலரும் அவருக்கு ஆறுதல் கூறிவந்தாலும், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகளும், வதந்திகளும் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், சினிமாவில் அவர் ஜொலிப்பது கஷ்டம்தான் என பலரும் கூறிய நிலையில், அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா, தெலுங்கு சினிமாவின் சாக்லேட் பாய் விஜய் தேவரகொண்டாவுடன் 'குஷி' என்ற தெலுங்கு படத்தில் ஜோடி சேர உள்ளார் என்ற செய்தி பரவியது.

இச்செய்தியானது, அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்த நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்க்கும்போது, சமந்தா எல்லாக் கவலைகளையும் துறந்து, துடிப்பான பீனிக்ஸ் பறவையாகவே பறக்க ஆரம்பித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

பொதுவாகவே உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள நினைக்கும் சமந்தா, தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ள நிலையில், பிரச்சினைகளிலிருந்து மீண்டு வந்து, போராடும் குணமுள்ள ஒரு வீராங்கணை உடற்பயிற்சி செய்வதுபோல் அந்த வீடியோ அமைந்துள்ளது.

இதையெல்லாம் பார்க்கும்போது, அவர் உடல்நலன் தேறிவந்ததற்கு அவர் எடுத்துக்கொண்ட உணவு முறையும், தினந்தோறும் செய்யும் உடற்பயிற்சியுமே அவரை இந்தளவுக்கு புத்துணர்வோடு செயல்பட வைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். இவரது இந்த ஒர்க்அவுட் வீடியோவைக் கண்ட சமந்தாவின் ரசிகர்கள் பீனிக்ஸ் பறவைபோல் கம்பேக் கொடுத்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com