சமந்தாவை சந்திப்பாரா சைதன்யா?

சமந்தாவை சந்திப்பாரா சைதன்யா?

தயத்தை திருடாதே, ரட்சகன் போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் நாகார்ஜுனா. இவருக்கும் நடிகை அமலாவுக்கும் பிறந்த நாக சைதன்யாவும் பல தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நாக சைதைன்யாவுக்கும் பிரபல நடிகை சமந்தாவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிறகு கொஞ்ச நாட்களிலேயே மணமுறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களது மணமுறிவுக்கான உண்மையான காரணம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமந்தா சைதன்யாவுடனான உறவு தற்போது நன்றாக இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், அதுகுறித்து சைதன்யா எந்த பதிலும் கூறவில்லை.

சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா, ‘மயோசிடிஸ்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அனுதாபம் ஏற்பட்டது. பிரபலங்கள் பலரும் கூட அது குறித்து அவரிடம் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், நாக சைதன்யா, நாகார்ஜுனா மற்றும் அமலா ஆகியோரிடமிருந்து எந்த விசாரிப்புத் தகவலும் சமூக ஊடகங்களில் வெளியாவில்லை.

இந்த நிலையில் நடிகர் நாகார்ஜுனா நேரில் சென்று சமந்தாவை சந்தித்து நலம் விசாரிக்கப்போவதாகத் தகவல் பரவியுள்ளது. அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் சைதன்யா ஆகியோர் செல்வார்களா அல்லது அவர் மட்டும்தான் சென்று விசாரிக்கப்போகிறாரா என்பது குறிந்து எந்தத் தகவலும் இல்லை.

சைதன்யா-சமந்தா விவாகரத்துக்குப் பின்பும் நாகார்ஜுனாவின் நேர்மறையான பேச்சுக்கள் சமந்தாவின் ரசிகர்களை ஓரளவுக்கு சமாதானமாக வைத்துள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தாவை அவர் நேரில் சந்திக்கவுள்ளார் என்ற தகவல் சமந்தா ரசிகர்கள் மனங்களை குளிர்வித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com