சமந்தாவின், ‘யசோதா’ சென்சார் பெற்றது!

சமந்தாவின், ‘யசோதா’ சென்சார் பெற்றது!

க்‌ஷன், த்ரில்லர் படமான, ‘யசோதா’ யூ/ஏ சான்றிதழுடன் சென்சார் பெற்றுள்ளது. இதற்கு முன்பு பார்த்திராத அதிதீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட இந்தப் படத்தில் நடிகை சமந்தா நடித்திருக்கிறார். அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் இந்தப் படம் வாடகைத்தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும்.

சமந்தாவின் திறமையான நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் கதைக்கு வலுவூட்டும் பின்னணி இசை என இந்தப் படம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் கதையாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வாடகைத் தாயாக சமந்தா நடித்திருக்கும் இந்தப் படம் இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில், தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக உள்ளது. உன்னி முகுந்தன், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

உடல் நிலை சரியில்லாத இந்த நிலையிலும் கூட சினிமா மீது நடிகை சமந்தா காட்டும் அர்ப்பணிப்பு, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அவரது ரசிகர்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முதல் முறையாக பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உருவாகி, வெளியாகவிருக்கும் இந்தப் படம் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com