செரினா
செரினா

சமுத்திர கனி ஹீரோயின் ‘டிராமா குயின்’ செரினாவின் ‘கிரஷ்’

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நான்கு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி பி முத்து தனது குடும்ப பிரச்சனை காரணமாக தானாக வெளியேறிக் கொண்டார்.

மொத்தம் 21 போட்டியாளர்களின் ஒருவரான செரீனா அழகு பொம்மையாக பிக்பாஸ் வீட்டில் வலம் வந்தார். இப்படியான நிலையில் பொம்மை டாஸ்க் தனலட்சுமிகீழே தள்ளி விட்டதாக தலையில் அடிபட்டதாக இவர் ஓவர் ஆக்டிங் செய்ததுரசிகர்கள் மத்தியில் வெறுப்படைய செய்தது. இதன் காரணமாக கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் செரினா ' டிராமா குயின்', 'நடிகையர்திலகம்' என்றெல்லாம் நெட்டிசன்களால் பயங்கரமாக கலாய்க்கப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டார். இவர் சமுத்திர கனி, தம்பி ராமையா நடித்த 'வினோதய சித்தம்' படத்தில் நடித்துள்ளார்.

sherina
sherina

அதன் பிறகு சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு வார இறுதியில் பிக்பாஸ் ரசிகர்களிடம் மிக குறைவான வாக்குகள் பெற்று கடந்த வாரத்திற்கு முன்பே வெளியேறி இருந்தார்.

அதன் பிறகு அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி செரீனா அளித்த பேட்டிஒன்றில் . எனக்கு பிக் பாஸ் மீதுதான் கிரஷ்‌ என பேசியுள்ளார். மேலும் ஆயிஷா மற்றும் குயின்ஷி தனக்கு நல்ல தோழிகள். அவர்களுடன் நட்பை தொடர ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com