மைக்கேல்
மைக்கேல்

சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' ! பாடல் வெளியீடு!

சந்தீப் கிஷன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் பான் இந்தியத் திரைப்படமான 'மைக்கேல்' படத்தில் இடம்பெற்ற ‘நீ போதும் எனக்கு' எனத் தொடங்கும் முதல் பாடல் மற்றும் அதன் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மைக்கேல்'. இதில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைத்திருக்கிறார்.

மைக்கேல்
மைக்கேல்

ராஜன் ராதாமணாளன் வசனம் எழுதியிருகிறார். காந்தி கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். படத் தொகுப்புப் பணிகளை ஆர்.சத்தியநாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னராகத் தயாராகியிருக்கும் இந்த்த திரைப்படத்தைக் கரண் சி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகவிருக்கிறது.

தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி இருக்கிறது. ‘நீ போதும் எனக்கு' எனத் தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுத, பிரதீப் குமார் பாடியிருக்கிறார்.

இந்த பாடலின் காணொளியில் நாயகன் சந்தீப் கிஷனும், நாயகி திவ்யான்ஷா கௌஷிக்கும் சந்தித்துக் கொள்கிறார்கள். திவ்யான்ஷா கௌஷிக் தனது வீட்டின் நுழைவாயிலை சந்தீப் கிஷனுக்காகத் திறந்துவைக்கிறார். 

இதனைத் தொடர்ந்து பாடல் தொடங்குகிறது. காதலியிடம்  அத்துமீறலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கும் சந்தீப்பிடம் வாய்மொழியாக அழைப்பு விடுக்க, இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.

இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எனப் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com