சரக்கில் மன்சூர் அலிகான் வெட்டிய பலாப்பழம்!
எப்போதும் எதையாவது வித்தியாசமான விஷயங்களை செய்து வருபவர் மன்சூர் அலிக்கான். சினிமாவிற்கு ராகுகாலத்தில் பூஜை போடுவது, குறுக்கே பூனையை ஓட விடுவது, தன் படத்திற்கு மிக பெரிய தலைப்பு வைப்பது என பல. இந்த வரிசையில் தனது பிறந்தநாளை கேக்கிற்கு பதிலாக பலாப்பழத்தை வெட்டி கொண்டாடி உள்ளார்.
தன் பிறந்தநாளை ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் "சரக்கு". இப்படத்தின் படப்பிடிப்பில்தான் இந்த வித்தியாசமான முயற்சி செய்து பிறந்தநாளை படக்குழுவினர்களோடு கொண்டாடினார்.
'சரக்கு' படத்தில் மன்சூர் அலிகான் ஜோடியாக வலினா நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், சேசு, கென்ஸ்லி, யோகி பாலா மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள். ஜே. ஜெயக்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.
நடிப்பிலும், செயலிலும் எப்போதும் வித்தியாசம் காட்டுபவர் மன்சூர். சமூக அக்கறை கொண்டவர். தமிழ் இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதற்கு இந்த குடியும் ஒரு காரணமாக உள்ளது. குடி என்பதை உணர்த்தும் சரக்கு என்ற தன் படத்திற்கு மன்சூர் அலிக்கான் வைத்தது ஏனோ?