ஷாருக்கான் -1000 கோடி!

மும்பை பரபர
ஷாருக்கான் -1000 கோடி!

`1000 கோடியா? எந்தப் படம்? நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலக அளவில் ` 1000 கோடி வசூலைத் தாண்டி உள்ளது.

‘பதான்’ வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு இருந்தது. உள்நாட்டில் ` 623 கோடி; வெளிநாட்டில் ` 377 கோடி என `1000 கோடி ரூபாய் வசூலை இப்படம் எட்டியுள்ளது.

பாலிவுட் பாட்ஷா என அறியப்படும் ஷாருக்கான் கொடுத்துள்ள சூப்பர் come back இப்படம்.

`1000/- கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த ஐந்தாவது திரைப்படம் ‘பதான்’ ஆகும்.

முந்தைய 4 படங்கள் விபரங்கள் பின்வருமாறு:-

1) Dangal ` 1914 கோடி; 2) பாகுபலி 2  ` 1747 கோடி; 3) கே.ஜி.எப். 2 `  1188 கோடி, 4) ஆர்.ஆர்.ஆர். ` 1174 கோடி;

5) பதான்   ` 1000 கோடி.

சூப்பர்! ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிய இப்படம், இந்தி மட்டுமன்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது.

சல்மான்கான் திருமணத்துக்கு நோ!

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சல்மானின் தம்பி, தங்கைகளுக்குத் திருமணமாகி வளர்ந்த பிள்ளைகளும் உள்ளனர். ஆனால், சல்மான்கான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் வாழ்வில் காதல் வருவதும், போவதுமாக இருக்கிறது.

சல்மான்கானும், ஐஸ்வர்யாராயும் ஒரு காலத்தில் காதலித்தவர்கள். அது முறி்ந்துபோனது. நடிகை கத்ரீனா கைஃப் உடனான காதல் பிரச்னையானது.

‘மைனே ப்யார் கியா’ படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக, ‘பாக்யஸ்ரீ’ நடித்தார். அனைவரும் அந்த ஜோடியைப் பற்றியே பேசினார்கள். பின்னர் பாக்யஸ்ரீ வேறு சில படங்களில் நடித்த பிறகு, திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

சல்மான்கான் குறித்து பாக்யஸ்ரீ முன்பு பேட்டி ஒன்றில் கூறியது பற்றி தற்சமயம் பேசப்படுகிறது. அது என்ன?

“நான் சல்மான்கானைத் தெரிந்துகொண்டபோது, அவர் என்னிடம் கூறிய ஒரு விஷயம்” உண்மையென எண்ணுகிறேன்.

நல்ல பெண்கள் என் மீது காதல் கொள்வதை நான் விரும்பவில்லை என்ற சல்மான்கானிடம், “ஏன்?” எனக் கேள்வி கேட்டேன். “ஏனென்றால், நான் நல்லவன் இல்லையென நினைக்கிறேன்!” என்று பதிலளித்தார்.

மேலும், “என்னால் ஒருவருடன் நீண்டகாலம் இருக்க முடியாதென எண்ணுகிறேன். எளிதில் போர் அடித்துவிடும். இது கட்டுக்குள் வரும்வரை, மற்றவர்கள் என்னிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டுமென்பதால், யாரையும் நெருங்க விடுவதில்லை.”

பாக்யஸ்ரீ மேலும் கூறியதாவது: “சல்மான்கான் பெண்களின் பின்னால் போவதைவிட, அவர்கள்தான் அவர் பின்னால் போகிறார்களென்று நினைக்கிறேன். தனது குடும்பத்தை எப்படி பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறாரோ, அது போலவேதான் தன் வாழ்விலிருக்கும் பெண்களை மிகவும் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறார்.

சல்மான்கானின் வாழ்வில் வரும் காதலானது திருமணம் வரை செல்வதில்லையே என்று அவரது ரசிகர்கள் கவலைப்படுகின்றனர்.

அக் ஷய்குமார் – மை இந்தியா

பிரபல பாலிவுட் நடிகர் அக் ஷய்குமார் “இந்தியாதான் எனக்கு எல்லாமே. அதனால் என்னுடைய கனடா நாட்டு குடியுரிமையைத் துறக்க முடிவு செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

“1990களில் எனது 15க்கும் மேற்பட்ட படங்கள் தோல்வியுற்ற சமயம் மனமுடைந்து போனேன். அப்போது கனடா விலிருந்த நண்பன் அங்கே வருமாறு என்னை அழைக்க, சென்றேன். குடியுரிமை கிடைத்தது. எனது இந்த இரட்டைக் குடியுரிமை பற்றி பலர் தவறாகப் பேசுவதால், அதைத் துறக்க முடிவு செய்துவிட்டேன். இந்தியாவுக்கு மீண்டும் வந்தது நான் செய்த பாக்கியம்.”

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தபிறகு தமிழ்பட ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். அக்ஷய்குமார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பிரதம மந்திரி திரு மோடியை இன்டர்வ்யூ எடுத்தபின் மேலும் பிரபலமானார்.

எனினும், 2019ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இயலாமல் போனதற்குக் காரணம், அக் ஷய்குமாரின் கனடா நாட்டுக் குடியுரிமையென்று கூறப்பட்டது. அது முதல் பல்வேறு தரப்பினரின் தாக்குதல்களை அக் ஷய் குமார் எதிர்கொண்டு வந்தார். தற்சமயம் “இந்தியாதான் எனக்கு எல்லாமே!” என உருக்கமாக கூறி, கனடா நாட்டுக் குடியுரிமையைத் துறக்க விண்ணப்பம் செய்துள்ளார்.

நாட்டுப்பற்று வாழ்க!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com