jawan
jawanIntel

அட்லியின் தெறிக்கவிடும் ஜவான்.. மாஸ் ட்ரைலர் ரிலீஸ்! கலக்கும் ஷாருக்கான்!

Published on

ஜவான் படத்தின் ட்ரைலர் இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் டான் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அட்லீ. முதல் படமே மாபெரும் வெற்றியை கொடுத்த நிலையில் இரண்டாவது படத்தில் விஜய்க்கு இயக்குனரானார் அட்லீ.

தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த அட்லீ தற்போது பாலிவூட்டில் ஷாருகானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

கடைசியாக ஷாருகான் நடித்த 'பதான்' படம் 1,000 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்தது. இந்த நிலையில் ஷாருக்கானை வைத்து அட்லீ மிக பிரம்மாண்டமாக இயக்கும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கதாபாத்திரங்கள் மாஸாக இருப்பதாக அனைவரும் பதிவு செய்து வருகின்றனர். ஷாருகான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர்களின் ஜோடியை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.

logo
Kalki Online
kalkionline.com