இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்!

shahrukh khan and aryan khan
shahrukh khan and aryan khan

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், தந்தையின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் பேனரின் கீழ் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரது படங்கள் பாலிவுட்டில் மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இவர், தற்போது இளம் இயக்ககுநரான கோலிவுட்டைச் சேர்ந்த இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் 'ஜவான்' என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் இடைவெளிவிட்டு நடைபெற்று வரும் வேளையில், இப்படத்திற்கான ஃபர்ஸ்ட லுக் மட்டும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

அதன் முதல்கட்டமாக, ஆர்யன் கான் தனது முதல் வெப் சீரீஸுக்கான கதையை எழுதி முடித்துள்ளார். இது ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் கீழ் உருவாகவிருக்கிறது.

இந்நிலையில், அதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்க, இதை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com