ஷாருக்கான் நயன்தாராவுக்கு கொடுத்த முத்தம்! வைரல் வீடியோ!
நடிகர் ஷாருக்கான் சென்னை வந்து நயன்தாராவை சந்தித்த நிலையில், அவருக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பிய நயன்தாராவின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி பட்டையக் கிளப்பி வரும் திரைப்படம்தான் பதான். உலகம் முழுவதிலும 7000த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள நிலையில், இதுவரையிலும் ரூ. 700 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனையும் படைத்து வருகிறது.
பலத்த எதிர்ப்புகளும் இருந்த நிலையில், காஷ்மீர் ஸ்ரீநகரில் கூட ஷாருக்கானின் பதான் திரைப்படம் அரங்குகள் நிறைந்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிகூட இப்படம் குறித்து நெகிழ்ந்துபோய், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில்கூட பதான் குறித்து பாராட்டு மழை பொழிந்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஷாருக்கான் நடிகர் அட்லியின் இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் நிலையில், நேற்று 'பதான்' திரைப்பட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள மும்பையிலிருந்து நேற்று சென்னை வந்துள்ளார் ஷாருக்கான்.
அப்போது நயன்தாராவை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார். சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு, விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகளையும் பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பும்போது, ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் கொண்டனர். இதனால் அவ்விடம் சிறிது நேரம் பரபரப்புக்குள்ளானது.
பின்னர் ஷாருக்கானை கார் வரை சென்று வழியனுப்பிய நயன்தாராவின் கன்னத்தில் ஷாருக்கான் முததமிட்டார். பின்னர் அங்கிருந்த ரசிகர்கள் எல்லோருக்கும் பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு காருக்குள் சென்று அங்கிருந்து கிளம்பினார்.
இது சம்பந்தமான வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.