சாந்தனுவின்  இராவண கோட்டம்!

சாந்தனுவின் இராவண கோட்டம்!

'மதயானைக் கூட்டம்' படத்திற்கு பிறகு 7வருடம் கழித்து இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி படம் 'இராவண கோட்டம்'. சாந்தனு பாக்யராஜ்வும் , கயல் ஆனந்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரபு, அருள்தாஸ், தீபா சங்கர், சுஜாதா சிவகுமார், இளவரசு, சத்யா என்.ஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது கிரைம், த்ரில்லர், ஆக்‌ஷன் கலந்த திரைப்படமாக இருக்கும். இந்த படம் தமிழ் மொழியில் வெளியாகவுள்ளது.

ஒரு கிராமத்தில் உள்ள ஒரு தைரியமான இளைஞனைச் சுற்றி நடக்கும் கதைக்களம். கிராம மக்கள் மத்தியில் அந்த இளைஞன் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எதிர்பாராத சில குற்றங்கள் நடக்கின்றன, மேலும் பலரின் இலக்காகிறான். அவர் உண்மையை நிரூபித்து பிழைப்பாரா? இல்லையா என்பதே கதை.

கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றது. லார்ன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்ய ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com