கங்கனா ரனவத்தின் பகிர்வு

கங்கனா ரனவத்தின் பகிர்வு

பாலிவுட் பூமராங்!

பாலிவுட்டின் முன்னணி நடிகையும், இயக்குனரும், தயாரிப்பாளருமான கங்கனா ரனவத்,  சமூக வலைத்தளங்களின் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

பாலின அடையாளம் தொடர்பான கருத்துகளை பதிவிடுகையில், அவர் உருக்கத்துடன் கூறியிருப்பதாவது:-

“ஒரு நபரை நாம் எப்போதும் ஆண், பெண், திருநங்கையென பாலின அடிப்படையில் மதிப்பிடுவது சரியல்ல. டெக்னாலஜி வளர்ந்துவரும் இவ்வுலகில் பெண் இயக்குனர்கள், பெண் நடிகைகள் என்கிற வார்த்தை களுக்குப் பதிலாக இயக்குனர்கள், நடிகர்கள் போன்ற வார்த்தைகளையே பயன்படுத்துகின்றனர். பாலினம் அடையாளமில்லை. இதைப் பார்த்து ஆளை மதிப்பிட வேண்டாம். கிராமப்புறத்திலிருந்து வந்த நான், திரையுலகம் தற்போதுள்ள எனக்கான இடத்தை நானே உருவாக்கிக்கொண்டேன். பாலின அடையாளத்தை வைத்துக்கொண்டு குறுகிய மனப்பான்மையோடு செயல்பட்டிருந்தால் முன்னேறியிருக்க முடியாது. அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல வேண்டுமானால் அதிலிருந்து விடுவித்துக்கொள்வது அவசியம்.”

மேலும் அவர் கூறியதாவது “இதுவரை எந்தத் தவறான முடிவும் இதுவரை எடுத்தது கிடையாது. எனது ஆரம்ப காலத்தில் சிறியது, பெரியது எனப் பார்க்காமல், எல்லா வேலைகளையும் எடுத்துச் செய்வது வழக்கம். ‘ராஸ்கல்ஸ்’, ‘டபுள் டமால்’ போன்ற படங்களுக்குத் தகுதியானவர் நான் இல்லையென ரசிகர்களாகிய நீங்கள் கூறினாலும், என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அந்தக் காலகட்டத்தில் அவைகள் எனக்குப் பெரிய படங்களாகத் தோன்றியது. முடிவுகளை எடுத்தபின் விரக்தியடைவதோ, வருந்துவதோ கூடாது. எந்தப் பணியையும் இழிவானதாக கருதும் வழக்கம் என்னிடமில்லை” என்பதாகும்.

பின்புலமுள்ள அலியாபட்!

னைத்து துறைகளிலும் இருக்கும் ‘நெப்போட்டிசம்’ சினிமா மற்றும் அரசியல் துறைகளில் பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது என்கிறார் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் காதல் மனைவியும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவருமாகிய அலியாபட். சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பது “கடந்த சில வருடங்களாக நெப்போட்டிசம் தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. நல்ல வாய்ப்புகளுக்காக பின்புலம் எதுவுமில்லாத பலர் கடுமையாக போராடிக்கொண்டிருப்பவர்களைக் காண்கையில் அதிக வருத்தமாக இருக்கிறது. மற்றவர்களைவிட எனக்கான வாய்ப்புகள் எளிதாக கிடைக்கின்றன. என்னுடைய கனவுகளை மற்றவர்களின் கனவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் எனது கனவு மிகச் சிறியது. ஆனால், எல்லோருடைய ஆசைகளும், கனவுகளும் ஒன்றுதான்.

பாலிவுட்டில் எளிதாகக் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை வீணாக்காமல், தினமும் நூறு சதவிகிதம் எனது கடுமையான உழைப்பை அளிக்கிறேன். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல், என் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒழுங்காகச் செய்து வருகிறேன்.”

மிக ஆடம்பரமான இத்தாலியன் Brand ஆகிய Gucciக்கு  Brand Ambassador  ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அலியாபட் என்பது லேட்டஸ்ட் செய்தி.

ஆரோக்கியத்திற்காக இரவு உணவு ஸ்கிப்!

பாலிவுட் நடிகர் மனோஜ் பஜ்பாய், ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸேபூர்’, ‘பேமிலி மேன்’ மூலம் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்.

வரும் மே 23 அன்று OTT தளத்தில் இவரது ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இவர் தனது வழக்கமான உணவு பழக்க வழக்கங்கள் குறித்து கூறியதாவது:

ன்னுடைய தாத்தா நல்ல உடல் வலுவுடன் ஃபிட்டாக இருப்பதைக் கண்டு அவரது உணவுப் பழக்கங்களைக் கவனித்து, அவற்றை பின்பற்ற ஆரம்பிக்க உடல் எடை குறைந்து புத்துணர்ச்சியாக உணர்ந்தேன்.  சுமார் 12 – 14 மணி நேரங்கள் சாப்பிடாமல் இருந்ததோடு கொஞ்சம் கொஞ்சமாக இரவு உணவையும் தவிர்த்தேன்.

மதிய உணவிற்குப் பின், எங்கள் வீட்டு கிச்சன் செயல்படாது. ஹாஸ்டலில் படிக்கும் மகள் வந்தால் மட்டுமே செயல்படும். இரவு உணவை ஸ்கிப் செய்கையில் முதலில் கஷ்டமாக இருந்தது. போகப்போக பழகிவிட்டது. ஆரோக்கியமான பிஸ்கட்டுகள் சாப்பிடுவது, அதிக அளவில் தண்ணீர் குடிப்பது போன்றவைகள் பசியைக் குறைத்ததோடு, நல்ல பலனையம் கொடுத்தது. நீரிழிவு நோய், இதயத் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள இந்த உணவுமுறை பெரும் உதவியாக இருந்தது. 10 வருடங்களுக்கும் மேலாக இதை கடைப்பிடித்து வருகிறேன்.”

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com