'ஷூ' விமர்சனம்!

shoe
shoe

ராகவ் குமார் :

கல்யாண் இயக்கத்தில் சாம். C. S இசையில்  வெளி வந்துள்ள படம் ஷூ. ஊரில் சிறுமிகள் கடத்தப்பட்டு ஒரு இடத்தில் அடைக்கப் படுகிறார்கள். அங்கே பாலியல் துன்பங்களுக்கு உட்படுத்த படுகிறார்கள். பிரியா என்ற சிறுமியை அவரது தந்தையே இந்த கடத்தல் கும்பலிடம் விற்று விடுகிறார்.

பிரியா இங்கே உள்ள மற்ற சிறுமிகளிடம் தைரியத்தை உருவாக்கி  தப்பிக்க திட்டம் போடுகிறார். இந்த திட்டம் வெற்றி பெற்றதா என்பதை இறுதியில் சொல்லியிருக் கிறார் டைரக்டர். பெண் குழந்தைகள் கடத்தல், பாலியல் துன்புறுத் தல் போன்ற  முக்கியமான சமூக விஷயங்களை வலுவான திரைக்கதை இல்லாமல், சரியான புரிதலும் இல்லாமல் எடுத்திருக்கிறார் டைரக்டர்.

கடத்தப் படும் பெண்  குழந்தைகளின் பின்னணி என்ன? இவர்களை எங்கு கொண்டு செல்ல போகிறார்கள் என்ற எந்த தகவலும் இல்லை. இதற்க்கு நடுவில் ஷூவுக்குள் டைம் மிஷின் என்ற குழப்பம் வேறு. ஹீரோ என்று ஒருவர் வேண்டுமே என்பதற்காக திலீபன் வந்து போகிறார்.

பிரியா உட்பட சிறுமிகளாக நடிப்பவர்கள் ஓரளவு நன்றாக நடித்துள்ளார்கள். இருந்தாலும் ஒரு இடங்களில் இவர்களின் நடிப்பு மிகை நடிப்பாக இருக்கிறது. படத்தில் ஒரே ஆறுதலான விஷயம் யோகிபாபு அண்ட் கோவின் காமெடிகள் தான். கொஞ்சம் சிரிக்க முடிகிறது.பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது நமது நாட்டில் ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது.

இதை மையமாக வைத்து படம் எடுக்கும் போது சரியாக புரிந்து படம் எடுத்தால் நம் சமூகத்திற்கு செய்யும் நன்மையாக இருக்கும். ஷூ -பொருந்தவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com