ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்

ஆடியோ நாடகத்துக்கு குரல் கொடுத்த ஸ்ருதி ஹாசன்! 

 சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கும் ஆடியோ நாடகமான 'தி சான்ட்மேன்: ஆக்ட் ' என்னும் தொடரின் மூன்றாம் பாகத்தில் நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சொந்தக் குரலில் பின்னணி பேசியிருக்கிறார். 

கிராபிக் நாவல்களையும் ஆடியோ நாடகங்களையும் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டிசி நிறுவனம், பிரத்யேகமாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிடும் நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக 'தி சான்ட்மேன்: ஆக்ட்' எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் அந்த ஆடியோ நாடகத்தின் மூன்றாம் பாகத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், ஒரு வீட்டு பணிப்பெண்ணாக நடித்திருக்கிறார். 

இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது; 

இசைக் கலைஞராகத் தொடரும் என்னுடைய பயணத்தில் 'தி சான்ட்மேன்: ஆக்ட' போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப் பெரிய ரசிகை நான்.

நடிகை ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன்

நீல் கியாமன் எழுதிய தி சான்ட்மேன் எனும் ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் தயாரிப்பாளர்கள் இந்தத் தொடரை வெவ்வேறு தளங்களில் பிரபலப்படுத்தி இருக்கிறார்கள். 

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இவருடன் இந்தத் தொடரில் ஹாலிவுட் பிரபலங்களான ஜேம்ஸ் மெக்அவோய், கேட் இன்னிங்ஸ்,  மிரியம் மார்க்கோய்ல்ஸ் மற்றும் ஜஸ்டின் விவியன் பாண்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'சலார்' படத்தில் பிரபாசுடனும், நடிகர் பாலமுரளி கிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் 'என் பி கே 107' எனும் படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'சிரு 154' எனும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com