‘யாரியன் 2’ திரைப்படத்துக்கு சீக்கியர்கள் எதிர்ப்பு!

‘யாரியன் 2’ திரைப்படத்துக்கு சீக்கியர்கள் எதிர்ப்பு!

சீக்கியர்களின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக உள்ள கீர்பானை தவறாக அணிந்ததாக இந்தியில் உருவாகி வரும், ‘யாரியன் 2’ படக்குழுவினர் மீது சீக்கிய அமைப்பினர் குற்றம் சுமத்தி உள்ளனர். சீக்கிய மதத்தினரின் முக்கிய நம்பிக்கையும், அவர்கள் பின்பற்றும் ஐந்து கடமைகளில் ஒன்றான கீர்பான் கருதப்படுகிறது. கீர்பான் அணிவதை சீக்கிய மக்கள் தங்கள் உரிமையாகக் கருதுகின்றனர்.

இந்த நிலையில், இந்தி மொழியில் ‘யாரியன் 2’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும், ‘சாஹீரே கர்’ என்ற பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்தப் பாடலில் வரும் ஒரு காட்சியில் மீஸான் ஜாப்ரி வெறும் தலையுடன் கீர்பான் அணிந்திருப்பது போன்ற காட்சி உள்ளது. இது சீக்கிய மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, பல்வேறு சீக்கிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கீர்பான் அணிவது சீக்கிய மக்களின் உரிமை. சீக்கியர்களுடைய ஐந்து தூண்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. தலைப்பாகை இல்லாமல் கீர்பான் அணிவது சீக்கிய மக்களை இழிவுபடுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது.

சீக்கிய மக்களுக்கே உண்டான இந்த உரிமையை, ‘யாரியன் 2’ படக் குழுவினர் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர். இது எங்கள் மத உணர்வைப் புண்படுத்தும் செயல். எனவே, இந்தப் படத்தில் வரக்கூடிய இது சம்பந்தப்பட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கைகள் மூலம் அது நீக்கப்படும். மேலும், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மேலும், பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் இதைக் கண்டித்து சீக்கிய அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com