இந்தியன் 2ல் வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா!
மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஷங்கர், இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ்நாட்டு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற முக்கிய திரைப்படமாக மாறியது. லஞ்சம், ஊழல், முறைகேடுகள் என்று மாறிப்போன சமூகத்தின் அவலத்தை பார்த்து வெகுண்டெழுந்த ஒரு முதியவரின் கோபத்தின் வெளிப்பாடாக இந்தியன் திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்தியன் திரைப்படத்தினுடைய மாபெரும் வெற்றி நீண்ட ஆண்டுகள் பிறகு இந்தியன் 2 எடுப்பதற்கு காரணமாக மாறி இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியன் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குனர் ஷங்கர் தொடர்ந்து முயற்சி எடுத்தார். இந்த நிலையில் பல்வேறு வகையான சிக்கல்களுக்கு இடையே தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்தியன் இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். படத்தில் கதாநாயகனாக நடிகர் கமலஹாசனும் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மா, ரத்னவேலு ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். இந்த நிலையில் படத்தில் வில்லனாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்திருப்பது தற்போது உறுதியாகி உள்ளது.
நடிகர் எஸ்.ஜே. சூர்யா அளித்த பேட்டி ஒன்றில் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்த படங்கள் அவருக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.