மிர்ச்சி சிவா - பிரியா ஆனந்த் - சிவாங்கி
மிர்ச்சி சிவா - பிரியா ஆனந்த் - சிவாங்கி

விரைவில் வெளியாகவுள்ள 'காசேதான் கடவுளடா'!

தமிழ், சென்னை 28, வண்ணகம் சென்னை படத்தில் நடித்த மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம் 'காசேதான் கடவுளடா'. எதிர் நீச்சல் , வண்ணகம் சென்னை , அரிமா நம்பி, இரும்பு குதிரை போன்ற படங்களில் நடித்த பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

யோகி பாபு, ஊர்வசி, மனோபாலா, விடிவி கணேஷ், விஜய் டிவி புகழ், சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். 'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' போன்ற வெற்றி படங்களை இயற்றிய ஆர்.கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

காசேதான் கடவுளடா
காசேதான் கடவுளடா

1972 ஆம் ஆண்டு முத்துராமன் - லட்சுமி நடிப்பில் வெளிவந்த பிரமாண்ட வெற்றி பெற்ற தமிழ் திரைப்படமான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக் திரைப்படமாகும்.

ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் மற்றும் எம் கே ஆர் பி இணைத்து இப்படத்தை தயாரித்துள்ளனர். 'காசேதான் கடவுளடா' படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com