சூப்பர் ஸ்டார் இல்லத்தில் ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள்!

சூப்பர் ஸ்டார் இல்லத்தில் ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள்!

- எஸ்.கல்பனா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று பரனூர் அண்ணா என்று அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் நேரில் சென்று ஆசி வழங்கினார்.

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் இன்றுடன் முடிவடையும் நிலையில், நேற்று அவரது விஜயம் நடந்தது.

தன் இல்லத்துக்கு வருகை புரிந்த ஸ்ரீ கிருஷ்ணபிரேமி சுவாமிகளுக்கு ரஜினியும் அவரது மனைவி லதாவும் பாத பூஜை செய்து வழிபட்டனர். அவர்களுக்கு ஆசி வழங்கிய சுவாமிகள், பின்னர் அங்கிருந்த ராதா - கிருஷ்ணர் சிலைகளுக்கு மலர் மாலை சாற்றி பூஜை செய்தார்.

இப்போது இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
Kalki Online
kalkionline.com