ஸ்டண்ட் நடிகருக்கு நடிகர் விஷால் பாராட்டு!

ஸ்டண்ட் நடிகருக்கு நடிகர் விஷால் பாராட்டு!

மீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம், 'வீரமே வாகை சூடும்.' இந்தத் திரைப்டத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்தா. இதே படத்தில் ஜோசப் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் சோமுவும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் விஷால் சோமுவைத் துரத்திக் கொண்டு ஓடும்படி ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியின் இறுதியில் சோமு ஒரு லாரியில் அடிபட்டு இறந்து விடுவதைப் போல அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

படப்பிடிப்பு நடக்கும்போது இந்தக் காட்சியைப் படமாக்குவது அபாயம் நிறைந்தது என்பதால் முதலில் சண்டைக் கலைஞர்களை வைத்து டூப் போட்டுப் படமாக்கலாம் என்று இயக்குநர் சரவணன் திட்டமிட்டு இருந்தார். படப்பிடிப்பில் சில காரணங்களால் இந்தக் காட்சியை நடிகர் சோமுவையே நடிக்கச் செய்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் நினைத்தார். ஆனால், சோமு சினிமாவுக்கு மிகவும் புதிது. அவர் சண்டைப் பயிற்சி மற்றும் இதுபோன்ற சாகசக் காட்சிகள் செய்வதில் பரிச்சயம் இல்லாதவர். இருந்தாலும் இயக்குநர் சரவணன் நடிகர் சோமுவிடம் இந்தக் காட்சியைப் பற்றி விளக்கிக் கூறியபொழுது நடிகர் சோமு மிகுந்த ஆர்வத்துடன் இதைத் தாம் செய்வதாகக் கூறினார்.

இந்தக் காட்சி படப்பிடிப்பின்போது, சோமு எவ்வித பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் நடிப்பதைப் பார்த்த விஷால் மிகவும் வருத்தப்பட்டார். உடனே தன்னுடைய உதவியாளரை அழைத்து, காரில் உள்ள தனது பாதுகாப்பு சாதனங்களைக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், அதை தனது கையாலேயே சோமுவுக்கு அணிவித்துள்ளார். எவ்வித பின்புலமும் இல்லாமல் ஒரு குணசித்திர நடிகராக வந்த தனக்கு ஒரு முன்னணி கதாநாயக நடிகரே தமது கையால் இதுபோன்ற உதவிகளைச் செய்ததைக் கண்ட சோமு, மிகவும் மனம் நெகிழ்ந்துப் போனார். படப்பிடிப்பின்போது சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியின் முடிவில் சோமு மிக அற்புதமாக நடித்து தன்னுடைய ஸ்டண்ட் வேலைகளையும் காட்டி அனைவரின் கைதட்டல்களையும் பெற்றார். மேலும் நடிகர் விஷால், "யாருடா நீ? இத்தனை நாள் எங்கடா இருந்த? சினிமாவுல நீ நல்லா வருவ. உனக்கு ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு'' என்று மனதாரப் பாராட்டினார்.

தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சோமு, இப்பொழுது விஷாலின் அடுத்த படமான, 'லத்தி' மற்றும் 'மார்க் ஆண்டனி 'என இரு படங்களிலும் நல்ல வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. சோமு, வடசென்னை, சார்பட்டா படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com