ஆமீர் கான்
ஆமீர் கான்

அடுத்தடுத்து தோல்வி படங்கள்! அமீர்கான் எடுத்த அதிரடி முடிவு!

ஆமீர் கான் ஒரு பிரபலமான இந்தி திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் . ஆமீர் கான் எப்போதும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர்அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு எந்தபடங்களிலும் நடிக்காமல் ஒரு பிரேக் எடுக்க உள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆமீர் கான் ஹிந்தியின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடித்த லால்சிங் சத்தா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில்அவருடன் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

laal singh chaddha
laal singh chaddha

இப்படம் ஒரு பான் இந்தியா மூவியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி இப்படம் ரிலீசுக்கு முன்பே இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாலிவுட்டில் பாய்காட் லால்சிங் சத்தா டிரெண்ட் வைரலாகியது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், தங்கல் படத்துக்கு பின் அமீர்கான் நடித்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் மற்றும் லால் சிங் சத்தா ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால், அவர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதன்படி அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு எந்த படங்களிலும் நடிக்காமல் ஒரு பிரேக் எடுக்க உள்ளார்.. அந்த காலகட்டத்தில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவும், படத் தயாரிப்பில் கவனம் செலுத்தவும் அமீர்கான் முடிவு செய்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com