சூப்பர் ஸ்டார் - பி.வாசு கூட்டணியில் புதிய படம்!

சூப்பர் ஸ்டார் - பி.வாசு கூட்டணியில் புதிய படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்தத் திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சென்னையின் புறநகர் பகுதிகளான கிழக்குக் கடற்கரை சாலை மற்றும் எண்ணூர் போன்ற கடல் சார்ந்த பகுதிகளில் இது படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் பெரும்பகுதி முடிவடைந்திருக்கும் நிலையில், இந்தப் படத்தை வரும் தமிழ் புத்தாண்டில் வெளியிட இருப்பதாக அந்தப் படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்து, ரஜினியின் 171வது படத்தின் பெயர், ‘டான்’ எனவும், அந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாகவும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் படம் தற்காலிகமாகக் கைவிடப்படுவதாகவும், அதற்கு பதில் இயக்குநர் பி.வாசுவின் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கெனவே ரஜினியை வைத்து பி.வாசு இயக்கிய, ‘சந்திரமுகி’ திரைப்படம் பெரிய அளவில் வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தின் தொடர்ச்சியாக தற்போது, ‘சந்திரமுகி 2’ எனும் படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான தனது அடுத்த படத்தைத் பி.வாசு துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி – பி.வாசு கூட்டணியில் பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குசேலன் போன்ற திரைப்படங்கள் வெளிவந்தன. இவற்றில் முதல் மூன்று படங்கள் மிகப்பெரும் வெற்றிப் படங்களாக அமைந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com