கமலை தொடர்ந்து ரஜினியை இயக்கும் லோகேஷ்.. #Thalaivar171!

Thalaivar171
Thalaivar171

ஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பதாக தெரிவித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், லோகேஷ் கனகராஜ் தான் அதனை இயக்குவார் என அறிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு மாநகரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதித்த லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து இயக்கிய கைதி மற்றும் மாஸ்டர் படங்களின் மகத்தான் வெற்றியால், கமல்ஹாசனை வைத்து கடந்த ஆண்டு விக்ரம் என்ற Block buster படத்தை கொடுத்தார். தான் எடுத்து 4 படங்களிலும் ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல பெயரை எடுத்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது விஜயுடன் லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜிற்கு, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் ரஜினி, கமல்ஹாசனை மிஞ்ச ஆளே இல்லை. இன்றும் அவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து விக்ரம் படம் எடுத்து அசத்தலான வெற்றி கொடுத்த நிலையில், தற்போது ரஜினியை வைத்தும் படம் இயக்கவுள்ளார். சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த காம்போவிற்காக காத்திருக்கின்றனர்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 171வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜயின் லியோ படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதன் பின்னர் ரஜினியின் 171ஆவது படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com