அடுத்த பயோபிக் படத்தில் சூர்யா! அதுவும் அந்த பிரபலமான பிஸ்கட் கம்பெனி நிறுவனராக நடிக்கிறார்!

அடுத்த பயோபிக் படத்தில் சூர்யா! அதுவும் அந்த பிரபலமான பிஸ்கட் கம்பெனி நிறுவனராக நடிக்கிறார்!

தற்போது பிசியான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது கைவசம் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்', அடுத்து, சுதா கொங்கரா உடன் ஒரு படம், இயக்குனர் ஞானவேல் உடன் ஒரு படம் என படுபிஸியாக இருந்து வருகிறார்.

சூர்யாவின் படங்கள் என்றாலே தற்போது பலத்த எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. அந்தவகையில், 'விக்ரம்' படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் ஒரு சில நிமிடங்களே வந்து ரசிகர்களை எதிர்பார்ப்புக்குள்ளாக்கியவர்.

அதற்கு காரணம், அவர் தற்போது தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அந்தளவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், தற்போது 'சூரரைப் போற்று' பட பாணியில் அடுத்ததாக மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அப்படத்தை பிரபல மலையாள நடிகரான பிருத்விராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிருத்விராஜ் இதற்கு முன்னதாக, மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்த 'லூசிபர்', 'ப்ரோ டாடி' வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

சில நாட்களுககு முன்னர், சூர்யா கேரளா சென்றிருந்தபோது, பிருத்விராஜை சந்தித்திருந்தார். அதுசம்பந்தமான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகியது. அந்த சந்திப்பின் போதுதான இப்படம் குறித்த விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சூர்யா - பிருத்விராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த பயோபிக் படத்தில், பிரபல பிஸ்கட் கம்பெனிகளில் ஒன்றான பிரிட்டானியாவின் நிறுவனர் ராஜன் பிள்ளையின் வாழ்க்கையை முக்கிய கருவாக வைத்துதான் எடுக்க இருக்கிறார்கள். விரைவில் இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com