
நடிகர் சூர்யா நடிப்பதில் பிஸியாக இருந்தாலும், தனது குடும்பம், சமூக அக்கறை, ரசிகர்கள் சார்ந்த விஷயம் என மற்ற விஷயங்களிலும் தீவிரமாக அக்கறை காட்டக்கூடியவர்.
இந்நிலையில், கடந்த மே 6 அன்று, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் உள்ள ஒரு மாலில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இது இந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த இரண்டாவது மிக மோசமான சம்பவமாகவும் கருதப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அதில் சூர்யாவின் தீவிர ரசிகையான ஐஸ்வர்யா என்பவரும் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, அவர் தனது தீவிர ரசிகை என்பதை அறிந்ததும், தனது ரசிகைக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரின் பெற்றோருக்கு உணர்ச்சிமிக்க கடிதத்தையும் எழுதியுள்ளார்.
அதில், "உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், உங்களால் ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு எனது உண்மையான மற்றும் அனுதாப இரங்கலைத் தெரிவிக்க முயற்சிக்கையில் வார்த்தைகள் தோல்வியடைந்தன. டெக்சாஸில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உங்கள் மகள் ஐஸ்வர்யாவை இழந்தது, மிகப்பெரிய அதிர்ச்சியாகவும், இதயத்தை சுக்குநூறாக்கவும் செய்தது" என்று கூறி, அந்த கடிதத்தை கீழ்கண்டவாறு தொடர்ந்து எழுதியுள்ளார். இதோ அந்த கடிதம்...