சஸ்பென்ஸ் திரில்லர்.. சூப்பட் படம் கார்பன் படம்!

சஸ்பென்ஸ் திரில்லர்.. சூப்பட் படம் கார்பன் படம்!
Published on

.-ராகவ் குமார்.

தமிழ் சினிமாவில்  சமீப காலமாக சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் வந்து கொண்டுஇருக்கின்றன. இந்த வகையில் சமீபத்தில்  பொங்கல் ரிலீஸ் படங்களில் ஒன்றான கார்பன் படமும் சேரும்.

நடிகர் விதார்த்துக்கு இது 25-வது படம். இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கி உள்ள கார்பன் போன்ற நல்ல கதை அம்சம் உள்ள படத்தில் விதார்த் நடித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய முயற்சி.      சரி.. கதை என்ன? போலீஸ் பணியில் சேரும் கனவில் இருக்கும் விதார்த்துக்கு கனவில் வரும் அனைத்து சம்பவங்களும் நிஜமாகவே வாழ்க்கையில் நடக்கின்றன.மாநகராட்சியில் குப்பை லாரி ஓட்டும் தனது அப்பா மாரிமுத்துமீது கார் மோதுவது போல கனவு காண, பலித்து விடுகிறது. அப்பா மாரிமுத்துவிற்கு நடந்தது விபத்து ல்ல.கொலைமுயற்சி என்று விதார்த் கண்டு பிடிக்கிறார்.இந்த கொலை முயற்சி ஏன் நடத்தப்பட்டது, காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த நபர் கனவில் வந்தாரா என்ற பல வினாக்களை சஸ்பென்ஸ் குறையாமல் சொல்லி இருக்கிறார் டைரக்டர்.முதல் பத்து நிமிடங்களுக்குள் நம்மை கதைக்குள் வர வைத்து விடுகிறார் டைரக்டர்.

விதார்த் பக்குவமான நடிப்பில் அசத்துகிறார். அப்பாவிடம் நேரில் பேசாமல் வாட்ஸாப்பில் பேசுவதும், அப்பா ஹாஸ்பிடலில் இருக்கும்போது உருகுவதும் என சிறந்த நடிப்பை தந்துள்ளார்.இதற்ககு முன்னால் சிறிய வேடங்களில் நடித்து வந்த தன்யா பாலகிருஷ்ணன் இப்படத்தில் மிரட்டல் ஹீரோயினாக வந்துள்ளார். வித்தார்திடம் காதலில் உருகுவதும், இன்னொரு பக்கம் கொடூரமான முகத்தை காட்டுவதும் என அதகள படுத்தியுள்ளார். அதேபோல் அப்பா மாரிமுத்து கதாபாத்திரமாக  மூணாறு ரமேஷின் நடிப்பு சிறப்பு. சாம் சி எஸ் இசை படத்திற்கு  பெரிய பலம். கிளைமாக் ஸில்    லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படத்தை ரசிக்க முடிகிறது. கார்பன் புதிய முயற்சி.-ராகவ் குமார்.   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com