'ஒத்த ஓட்டு முத்தையா' கம் பேக் கவுண்டமணி!

'ஒத்த ஓட்டு முத்தையா' கம் பேக் கவுண்டமணி!

சிறந்த கதை இருந்தால்தான் நடிப்பேன் என்று உறுதியாக சொன்ன கவுண்டமணி அண்ணன் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். அதுவும் ஹீரோவாக. படத்தின் பெயர் ஒத்த ஓட்டு முத்தையா கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும்  இப்படம் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகி  உள்ளது 'ஒத்த ஓட்டு முத்தையா படத்தை ஷஷி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார்.

குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, 'எதிர்நீச்சல்' ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது.

மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர். கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், "சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன். 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.

'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். சாதாரணமாகவே கவுண்டமணியின் படத்தில் காமெடி லொள்ளு நிறையவே இருக்கும் சம கால அரசியல் என்றால் கேட்கவா வேண்டும் அரசியல்வாதிகளை 'வைத்து செய்திருப்பார்'என்று தோன்றுகிறது. வாங்க மணி சார் வீ ஆர் வைட்டிங் 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com